Posts

Showing posts from March, 2024

தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி!

 தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 29 தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி! தோழர் ராகவேந்திரன் தோழர்களே! தோழர் CSP ஒரு பொதுவுடைமை வாதியாக தன் கொள்கைகளை தொழிற்சங்கத்தில் உயர்த்திப் பிடித்து வாழ்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! ஆனால் அவர் வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிராக சமரசமற்ற போர் புரிந்தவர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  தபால் தந்தி தொழிற்சங்கமாம் NFPTE பேரியக்கத்தில் வலது திரிபின் சார்பான தலைமையின் செயல்பாடுகளுக்கு எதிரான சமரசமற்ற போராளியாக தோழர் CSP ஆற்றிய மகத்தான பணி இயக்கத்தில் K G.போஸ் அணி வேரூன்ற அடித்தளமிட்டது என்றால் மிகையல்ல. அஞ்சல் பகுதி தவிர, ஏராளமான தோழர்களை டெலிகாம் பகுதியில் வென்றெடுத்த நிகழ்வு அவரது வலது திரிபிற்கு எதிரான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே. ஆனால் இடது தீவிரவாதமும் ஒரு சவாலாக எழுந்த காலம் அது. இயற்கையாகவே பல இடது திரிபின் பல அம்சங்களை உட்படுத்திய தோழர்களுடன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அடிக்கடி நிறைய சந்தேகங்கள் எழும்! தோழர் CSP பணி ஓய்விற்குப் பின் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தன் மகன்களுடன் வசித...