Posts

Showing posts from December, 2023

கம்யூனிஸ்ட் அறிக்கை அறிமுகம்

  பதிவு - 14 இன்னும் பதினைந்து வயது முடியவில்லை. 1964ல் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.யூ.சியில் சேர்ந்தாச்சு. நேரு மறைந்துவிட்டார். லால்பகதூர் பிரதமர். கல்லூரி தொடங்கிய சில மாதங்களிலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கிவிட்டது. இந்தி திணிப்பை எதிர்ப்பது என்கிற முடிவில் போராட்டத்தில் வேகமாக இறங்கி விட்டேன். ஆனாலும் போராட்டத்தின் போக்கிலும், அரசியலிலும் எனக்கு குழப்பம் இருந்தது.  நண்பர்களோடு மொழியைப் பற்றி பேசும்போது அரசியலும் பேச வேண்டியிருந்தது. அடிப்படையாக பேச வேண்டியதை தெளிவாக பேச அது வரை தெரிந்தவை போதவில்லை.  அப்பாவிடம் எத்தனையோ கேள்விகளை கேட்டிருக்கிறேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எளிமையாக பதில் கூறுவார்.  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தருவதால் (DA - பஞ்சப்படியைத்தான் தினத்தந்தி அப்படி கூறுகிறது)  விலை உயர்ந்து விடுமாமே? இது என் கேள்வி.  ஏற்கனவே விலை உயர்ந்ததனால் வாங்க முடியாமல் போன பொருள்களை வாங்கிக் கொள்ள தரப்படும் பஞ்சப்படியால் எப்படி விலை ஏறும்? கேள்வியாக அப்பாவின் பதில். என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் பரவியிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர் மெ...

இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை

செம்மலர் பிப்ரவரி 2011 17 பிப்ரவரி 2011 என்.ராமகிருஷ்ணன் எழுதிய  சி.எஸ். பஞ்சாபகேசன் இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை                         -வெ.சுந்தரம்  தோழர் சிஎஸ்பி என எல்லோராலும் அன்புடன் அழைக் கப்பட்ட சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ‘உழைக்கும் வர்க்கம்’ ஏட்டின் வெளியீடாக வெளி வந்துள்ளது. பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி ஆவணப்படுத்தியுள்ள தோழர் என். ராமகிருஷ்ணன் இதை எழுதியிருப்பது மிகவும் பொருத்தமானது. நவம்பர் 2009ல் சிஎஸ்பி யின் துணைவியார் திரிபுர சுந்தரி அம்மாள் மறைந்தபோது அவரது குடும்பத்தார் ‘அம்மா’ என்ற நினைவு குறிப்புகள் மற்றும் இயக்கச் செய்திகள் அடங்கிய நூலை வெளியிட்ட னர். ஒரு பகுதி செய்திகள் அதில் கிடைத்தாலும் முழுமையான நூலாக இது வெளி வந்துள்ளது நிறைவைத் தருகிறது. 1924ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எஸ்.எஸ். எல்.சி. படித்து, 1945ல் ஆரணி யில் தபால் தந்தி துறையில் பணி யில் சேர்ந்த சிஎஸ்பி 1957ல் வேலூருக்கு மாறுதல் செய்யப் பட்டார். அங்குதான் அவரது தொ...

பூணல்

 அப்பாவின் அம்மா ஆசாரம் மிகுந்தவர்கள். சித்தப்பா வீட்டிலும் எங்கள் வீட்டிலும் மாறி மாறி இருப்பார்கள்.  எங்கள் வீட்டில் இருக்கும் போது நாங்கள் அனைவருமே அவருக்கு ஏற்ற வகையில்  நடந்து கொள்வோம். இருந்தாலும் 'பூஜை புனஸ்காரம்'  எல்லாம் விட்டு விட்டார்கள் என்று  புரிந்து விட்டது. பூணலாவது இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு இருந்தது. தன் தாயார் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவருக்கு தெரியும் வகையில் அப்பா  திருமணமானவர்கள் அணியும் இரட்டை பூணலை அணிந்து கொள்வார். அம்மாவின் அம்மா அருட் பெருஞ்சோதி, தனிப் பெரும் கருணை வழி.  அப்பாவின் முற்போக்கான நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்வார்.  இருந்தாலும் பழக்க வழக்கங்களை கைவிட்டு விடுவதில் சிறிது அச்சம் அவருக்கு உண்டு. அவை குறித்து அப்பாவோடு பேசுவதும், அவரின் விளக்கங்களை வியந்து புன்னகையுடன் ஆமோதிப்பதும் நடைபெறும்போது அவை குழந்தைகளான எங்களுக்கும் தெளிவை தந்தன.  ஒரு முறை பாட்டி "பெரிய பேரன்கள் இருவரும் கல்லூரியிலேயே சேர்ந்து விட்டார்கள். இன்னும் பூணல் போடாமல் இருக்கலாமா? வரும் ஆனி மாதம் போடலாமே, ஆனியில் இரட்டை பூணல் போ...

தோழர்களின் தோழனாக சி.எஸ்.பி

 - ஜே.ரங்கநாதன், முன்னாள் ஆசிரியர் 'உழைக்கும் வர்க்கம்' சென்னை         25.12.2023. 1996 - மே 31 காலை 11.15. டெலிபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்து ஹலோ என்றேன். "உங்களுக்கு செய்தி தெரியுமா?" என்ற கேள்வி மறுபுறத்தில் இருந்து வந்தது. பேசியது தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், மார்க்சிய தத்துவ ஞானி. "சி.எஸ்.பி காலமாகிவிட்டார்" என்று தழுதழுத்த குரலில் கூறிய அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ரிசீவரை வைத்த நான் அமைதியாக அமர்ந்தேன். எனது துணைவியார் என்னை உலுக்கியபடி "என்ன ஆயிற்று" என்று கேட்ட போது நான் வாய் விட்டு அழுதேன். அந்த அழு குரலில் சி.எஸ்.பி என்று தடுமாறி உச்சரித்தேன். அவர் புரிந்து கொண்டார். உங்களை தைரியப் படுத்திக் கொள்ளுங்கள். புறப்படுங்கள் நானும் வருகிறேன் என்றார். மாதவரத்திலிருந்து புறப்பட்டு கிழக்கு தாம்பரம் தோழர் சி.எஸ்.பி வீடு செல்லும் வரை நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. எனது எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. தோழர் சி.எஸ்.பி உடனான தொடர்பும் தோழமையும் 1968 மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தையொ...

குடும்பத்தாரின் இயக்கப் பற்று

               - ஆர் எஸ் மணி, திண்டுக்கல். எழுபதுகளின் துவக்கமது..!!  அக்காலங்களில் மாநாடுகள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் பால்ய சகாக்களான ஆர்.ஜவகர், பால்வண்ணம், பாலு ஆகியோருடன் பேருந்திலோ லாரியிலோ சென்று பங்கேற்பதை வழமையாக, கடமையாகக் கொண்டிருந்த காலகட்டம்.  தியாகபூமியாம் திருச்சிபொன்மலை தியாகிகள் திடலில் தோழர்கள் பி.ராமமூர்த்தி மற்றும் ஜோதிபாசு பங்கேற்கும் டி.ஆர்.இ.யூ. சங்கப் பொதுக்குழு ( மாநாடு ) , பேரணி, பொதுக்கூட்டம் பற்றிய தகவலறிந்து பங்கேற்க முடிவு செய்தோம் . முதன்முறையாக தியாகபூமியாம் பொன்மலைத்திடலுக்குள் உணர்ச்சிபொங்க உற்சாகமாக நுழைந்தோம். மாநாடு துவங்கியது. மேடையில் ரயில்வே தொழிலாளிகளின் பேரன்பைப்பெற்ற தோழர் கே.அனந்த நம்பியார், தபால்தந்தி ஊழியர் இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் தோழர் கே.ஜி.போஸ், மற்றும் அப்போதுதான் உதயமாயிருந்த சி.ஐ.டி.யூ அமைப்பின் முதல்பொதுசெயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி ,சி.ஐ.டி.யூ.வின் துணைத்தலைவர் ஜோதிபாசு போன்றோர் அமர்ந்திருந்தனர். மாநாட்டை வாழ்த்திப்பேச தோழர். கே.ஜி.போஸ் அழைக்கப்பட்டதும் அவரது ஆங்கில உரையை தமிழி...

அம்மாவின் தைரியம்

அம்மாவுக்கு 32 வயது. நாங்கள் ஏழு குழந்தைகளும் பிறந்து விட்டோம். கிருஷ்ணன் கை குழந்தை. அப்போது அகில இந்திய தபால் தந்தி வேலை நிறுத்தம். வட ஆற்காடு மாவட்டத்தில் அப்பாவின் தலைமையில் நேருவின் இரும்புக்கர அடக்கு முறையையும் மீறி வெற்றிகரமாக நடை பெற்று வந்தது. தலை மறைவாக இருந்தபடியே நடத்தி வந்தார். ஐந்தாவது நாள் என்று நினைவு. அப்பா கைதாக முடிவு செய்யப் பட்டது. போலீஸுக்கு தகவல் தந்து போலீஸார் வீட்டுக்கு வந்து அப்பாவை கைது செய்து அழைத்து சென்றனர். அம்மாவின் முகத்தில் அப்பாவின் தைரியம் பிரதிபலித்து எங்களையும் பற்றிக் கொண்டது. நாங்கள் அனைவருமே தைரியத்துடன் வழியனுப்ப அப்பா போலீஸ் ஜீப் ஏறிச் சென்றார். அன்று அம்மா எங்களுக்கு அளித்த தைரியம் இன்று வரை எங்களுக்கு வழி காட்டுகிறது. இன்று அம்மாவின் நினைவு நாள்.

அம்மா

 அப்பாவின் லட்சிய வாழ்க்கைக்கு அடித்தளமே அம்மாதான்.  பெரும்பாலான வார நாட்களில் அலுவலகம் முடிந்த பின், இயக்க பணியை முடித்து கொண்டு இரவு ஒன்பது மணிக்குதான் அப்பா வீடு திரும்புவார்.  அதே போல் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாலை அலுவலகத்திலிருந்தே இயக்க வேலையாக வெளியூர் சென்று திங்கள் காலை நேராக அலுவலகத்திற்கே திரும்புவார்.  விடுமுறை நாட்களளிலும் இப்படித்தான். வீட்டில் இருக்கும் நாட்களிலும் நேரத்திலும் வீட்டிற்கு வரும் தோழர்களுடன் பேச வேண்டியிருக்கும். ஆனால், அவசியத்தை ஒட்டி நேரம் ஒதுக்கி குடும்ப வேலைகளை கவனிப்பார்.  மற்றபடி அம்மாதான் ஏழு குழந்தைகளின் அனைத்து தேவைகளையும்  கனிவுடன் கவனித்துக் கொள்வார். எல்லா குழந்தைகள் மீதும் அன்பை பொழிந்து சீராக கவனிப்பார். வருந்தி வருந்தி உணவளிப்பார்.  கோபம் என்ற ஒன்றை அம்மாவிடம் நாங்கள் பார்த்ததேயில்லை. சுடு சொல் ஒன்றும் கேட்டதேயில்லை. அம்மாவின் கவனத்தை அதிகம் பெறுவதற்கென்றே நாங்கள் முரண்டு பிடிப்பது உண்டு.  அத்தனையையும் அம்மா பொறுமையாய் சமாளிப்பார். ..  இதனால்தான் அப்பா தன் அலுவலக, இயக்க வேலைகளில் நிம்மதியுடன் ஈட...