அம்மாவின் தைரியம்

அம்மாவுக்கு 32 வயது. நாங்கள் ஏழு குழந்தைகளும் பிறந்து விட்டோம். கிருஷ்ணன் கை குழந்தை. அப்போது அகில இந்திய தபால் தந்தி வேலை நிறுத்தம். வட ஆற்காடு மாவட்டத்தில் அப்பாவின் தலைமையில் நேருவின் இரும்புக்கர அடக்கு முறையையும் மீறி வெற்றிகரமாக நடை பெற்று வந்தது. தலை மறைவாக இருந்தபடியே நடத்தி வந்தார். ஐந்தாவது நாள் என்று நினைவு. அப்பா கைதாக முடிவு செய்யப் பட்டது. போலீஸுக்கு தகவல் தந்து போலீஸார் வீட்டுக்கு வந்து அப்பாவை கைது செய்து அழைத்து சென்றனர். அம்மாவின் முகத்தில் அப்பாவின் தைரியம் பிரதிபலித்து எங்களையும் பற்றிக் கொண்டது. நாங்கள் அனைவருமே தைரியத்துடன் வழியனுப்ப அப்பா போலீஸ் ஜீப் ஏறிச் சென்றார். அன்று அம்மா எங்களுக்கு அளித்த தைரியம் இன்று வரை எங்களுக்கு வழி காட்டுகிறது.

இன்று அம்மாவின் நினைவு நாள்.

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்