தோழர் CSP சிறந்த மதியூகி!
- K.ராகவேந்திரன் முன்னாள் மாபொதுச்செயலர் - NFPE தோழர் CSP குறித்து நிறைய நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். அவரது நூற்றாண்டு தொடக்கம் ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும். முதலில் தோழர் CSP ஒரு சிறந்த மதியூகி என்பதை நான் அறிந்து கொண்ட ஒரு நிகழ்வின் மூலம் கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் முதன் முதல் ஒரு பார்வையாளனாகக் (observer) கலந்து கொண்ட அஞ்சல் மூன்று மாநில மாநாடு அது. தோழர் A.பிரேமநாதன் தலைவராகச் செயல்பட்டதும், தோழர் A.S.ராகவன் மாநிலச் செயலராகச் செயல்பட்டதும் அந்த மாநில மாநாட்டில் தான். உள்நாட்டு அவசரநிலை திருமதி இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டு பல்வேறு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காலம் அது. 1976 என்று கருதுகிறேன். பிளவுபட்டிருந்த NFPTE சம்மேளனத்தில் ஒற்றுமை உருவாக்கப்பட்டிருந்த காலம். அதேசமயம் சம்மேளன இயக்கத்தில் புதிய சிக்கல் நிலவிய காலம். சேலத்தில் மாநில மாநாட்டைக் கூட்டியிருந்தார்கள். தோழர் CSP ஒரு பிரதிநிதியாக வேலூர் கோட்டத்தில் இருந்து கலந்து கொ...