தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு
அப்பா போஸ்ட் மாஸ்டர். ஓரிரு ஆண்டுகள் மட்டுமே தபால் அலுவலகமும் வசிப்பிடமும் இணைந்திருந்த வீட்டில் குடியிருந்தோம். எப்போது அஞ்சல் அலுவலகத்தை பார்த்தாலும் எங்களுடைய வீடு போல எனக்கு தோன்றும். ஆனால் அதற்கு பின் நாங்கள் எத்தனையோ வீடுகளில் குடியிருந்தோம். அவையெல்லாம் எனக்கு வீடுகளாக தெரியவில்லை மார்க்சிய பள்ளியாகவே தெரிந்தன. காரணம் 365 நாட்களும் எந்த நேரத்திலும் வீட்டில் ஏதாவது ஒரு துறையைச் சேர்ந்த தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தை அறிமுகப்படுத்துவது, விளக்குவது தான் நடந்து கொண்டிருக்கும். அவருடைய வாழ்நாள் இறுதிவரை இப்படித்தான்..
எங்கள் தந்தை தோழர் சி எஸ் பஞ்சாபகேசனின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது.
10,10,1924 - 31-05-1996
Comments
Post a Comment