Posts

எனக்குள் ஒருவர்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு:31 எனது இளைய சகோதரன் சி பி சந்திரசேகரன் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு முடித்த உடனே பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க்காக பணியில் சேர்ந்து விட்டார். 19 வயதில் துவங்கிய கட்சிப் பணியும் சங்க பணியும் இன்று வரை இடைவிடாமல் தொடர்கிறது. காஞ்சிபுரத்தில் 35க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். 1974 முதல் 14 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கட்சியில் ஈர்த்து இணைத்துள்ளார். அவர்களில் பலர் பின்னாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள்.  அதன் பிறகு சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பில் திரும்பட செயலாற்றி உள்ளார். அவர் எங்களது தந்தை தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நினைவு நாளில் தனது நினைவை பகிர்ந்துள்ளார். *"எனக்குள் ஒருவர்..."* *ஒரு அநீதியை கண்டு உணர்ச்சிவசப்பட்டு வெகுண்டு எழும் இளைஞனை பார்த்து 40 வயதிற்குள் நீ ஒரு கம்யூனிஸ்ட் ஆக இல்லை என்றால் உனக்குள் ஏதோ கோளாறு என்று அர்தம். அதே 40 வயதை தாண்டிய பிறகும் நீ கம்யூனிஸ்ட் ஆக இருந்தால் அப்போதும் உனக்குள...

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு: 30 தோழர் ஜி ராஜாமணி in Face Book: இன்னைக்கு , வேறொரு புத்தகத் தைப் படிப்போம் என்கிற எண்ணத் தோடு,  புதுசா ஒண்ணை எடுத்து பக்கத்தைப் புரட்டினேன்.  அறிமுக  உரையே அசத்தலாக இருந்தது.   அது மட்டும் இன்றி, நூலாசிரியர், TNGEA அமைப்பின் முன்னாள் தமிழ் மாநில பொதுச் செயலராக இருந்தவர் என்பதோடு, என்னுடைய ஆசானின் குருகுலத்தில், எனக்கு  முன்  தத்துவம் பயின்ற சீனியர் மாணவர் என்பதும் தெரிய வந்தது.   வரிகளின் வழியே விழிகள் ஓடின. முதல் பத்தியில் அவர் கூறியிருப்ப தாவது:    " மத்திய அரசு ஊழியர்களின் தலைவரான, C.S. பஞ்சாபகேசன் மார்க்சியத்தை மிக மிக எளிமையாக என்னுள் ஏற்றிய என் குரு. பிறப்பால் பார்ப்பன சமுகத்தைச் சேர்ந்தவர்.  அவர் தான்  எனக்குப்  பார்ப்பனியத்தின்  உள் அடக்கங் களை  விஞ்ஞான  பூர்வமாகப்  புரிய வைத்தவர். அவருடைய  கருத்துக்களின் படி, மார்க்சியம்  வெற்றி பெற, மூன்று  தளங்களில்  ஒரே நேரத்தில் போரட்டம்  நடத்த வேண்டும். #  முதலாவது அரசியல...

தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி!

 தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 29 தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி! தோழர் ராகவேந்திரன் தோழர்களே! தோழர் CSP ஒரு பொதுவுடைமை வாதியாக தன் கொள்கைகளை தொழிற்சங்கத்தில் உயர்த்திப் பிடித்து வாழ்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! ஆனால் அவர் வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிராக சமரசமற்ற போர் புரிந்தவர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  தபால் தந்தி தொழிற்சங்கமாம் NFPTE பேரியக்கத்தில் வலது திரிபின் சார்பான தலைமையின் செயல்பாடுகளுக்கு எதிரான சமரசமற்ற போராளியாக தோழர் CSP ஆற்றிய மகத்தான பணி இயக்கத்தில் K G.போஸ் அணி வேரூன்ற அடித்தளமிட்டது என்றால் மிகையல்ல. அஞ்சல் பகுதி தவிர, ஏராளமான தோழர்களை டெலிகாம் பகுதியில் வென்றெடுத்த நிகழ்வு அவரது வலது திரிபிற்கு எதிரான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே. ஆனால் இடது தீவிரவாதமும் ஒரு சவாலாக எழுந்த காலம் அது. இயற்கையாகவே பல இடது திரிபின் பல அம்சங்களை உட்படுத்திய தோழர்களுடன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அடிக்கடி நிறைய சந்தேகங்கள் எழும்! தோழர் CSP பணி ஓய்விற்குப் பின் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தன் மகன்களுடன் வசித...

My periappa and periamma

 On this momentous occasion of Periappa's birth centenary remembrance, I am filled with immense gratitude and appreciation for the legacy he had left behind.  His life has been a source of inspiration, and today, as we commemorate his hundred years, I want to express my heartfelt thanks for the wisdom and love he shared with us. My Perriamma and Perriappa played a vital role in my career.They both were very lovable and very affectionate persons. My sincere Thanks and gratitude to both of them.  Periappa was an interesting person, voracious reader , a humorous admirable person. He was a walking encyclopedia. He could talk about any subject from Ramayanam,Mahabaratham ,Barathiyar to Carl Marx, Lenin etc. He was able to analyze and argue any subject to the nook and corner. He could attract all persons from kids to old people.   His dedication towards worker's union was remarkable. He was an employee of Postal service. During his service he served as an union leader...

பிள்ளைகள் அனைவரும் இயக்கத்தில்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 28 சி.எஸ்.பி தன் பிள்ளைகள் அனைவரையுமே  இடதுசாரி இயக்கத்தில் ஈடு படுத்தியுள்ளார் என்று பெருமையாக குறிப்பிடுவார்கள். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் இடதுசாரி கருத்துக்களை எனக்குள் எப்படி பதிய வைத்தார் என்று நிகழ்வுகளாக குறிப்பிட்டிருந்தேன். இடதுசாரி இயக்கத்தில் எவ்வாறு ஈடுபடுத்தினார் என்பதை இந்த பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். குடியிருப்புடன் இணைந்த காட்பாடி எக்ஸ்டென்ஷன் போஸ்ட் ஆஃபீஸில் அப்பா வேலை செய்த போது எதிர் வாடையில் குடியிருந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டிலேயே ஒரு ஆங்கில மருந்து கடை துவங்கினர். அப்பா அக்கவுன்டன்சி படித்துவிட்டு கூட்டுறவு சங்கத்தில் முதன் முதலில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த மருந்து கடைக்கு வேண்டிய கணக்குகளை எப்படி வைக்க வேண்டும் என்று துவக்க நிலை உதவிகளை செய்து தந்தார். அதே நேரத்தில்தான் 1960 அகில இந்திய தபால் தந்தி வேலை நிறுத்தம் வந்து, அதில் முன்னணி பாத்திரம் வகித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ஓரிரு மாதங்களுக்கு பிறகு பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டு தாற்காலிக பணி நீக்கத்தில் சில மாதங்கள் வைக்கப...

வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967)

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு: பதிவு 27     - ரா. ஜெகதீசன், AIIEA வேலூர் கோட்ட முன்னாள் பொதுச் செயலாளர், AIIEA முன்னாள் ஒர்கிங் கமிட்டி உறுப்பினர் வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967) 1960களில் வேலூரில் தொழிற்சங்க இயக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பீடித் தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஆவர். மின்னணு இயந்திரங்களை LICயில் திணிக்கும் முடிவை காங்கிரஸ் ஒன்றிய அரசு எடுத்தது. மும்பையில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது எளிதாக ஓர் இயந்திரத்தை LICயில் நிறுவினர்(1965). இரண்டாம் இயந்திரத்தை கொல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டபோது மேற்கு வங்கத் தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. அப்போது தோழர் ஞானையா (NFPTE)  தலைவராகவும் தோழர் சரோஜ் சவுத்ரி (AIIEA) செயலாளராகவும் கொண்ட ஓரமைப்பு இயந்திரமயமாக்கலை எதிர்க்க உருவாக்கப்பட்டது. LICயில் வேலைநிறுத்தங்கள் நடக்கும்போது அஞ்சல் துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஆதரவளித்தன. இத்தருணத்தில் சி.எஸ்.பி. நகரத் தொழிற்சங்கங்களை இணைக்க முயற்சி செய்வதில் வெற்றி பெற்றார். கு.மா. பாலசுப்ரமணியம் (RMS-NFPTE) தலைவராகவும் நான் (AI...

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 26 - K.ராகவேந்திரன்   முன்னாள் மாபொதுச்செயலர் NFPE GDS ஊழியரை Group E ஊழியராக்குக - தோழர் CSP-யின் புதிய ஆலோசனை! GDS ஊழியரை இலாகா ஊழியராக்குக என்பது நமது குரல். 3, 4, 5 மணி நேரம் பணியாற்றும் GDS ஊழியரை எப்படி 8 மணி நேர இலாகா ஊழியராக்குவது என்பது இலாகாவின் பதில். ராயப்பேட்டையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில்,  அன்றைய NFPTE மாபொதுச்செயலர் தோழர் O.P.குப்தா பேசும்போது, GDS ஊழியரை இலாகா ஊழியராக அறிவிப்பது நாட்டில் சோஷலிசம் வந்தபின்னரே சாத்தியம் என்றார்! GDS ஊழியரை பகுதி நேர ஊழியர் மட்டுமே (Part Time) என்பது இலாகாவின் நிலை. இந்நிலையில் பல்வேறு ஆலோசனைகள் நம்மால் அரசுக்கு முன்பு வைக்கப்பட்ட காலம்.  அப்போது தோழர் CSP ஒரு அற்புதமான யோசனையை முன்வைத்தார். அதாவது GDS ஊழியரை குரூப் E ஊழியராக்கினால் இலாகா ஊழியராக்கவும் இயலும்; 8 மணிக்குக் குறைவான வேலைநேரம் என்னும் வாதத்திற்கும் பதில் சொல்ல இயலும்; இலாகா ஊழியரின் அனைத்து சலுகைகளும் (ஊதியம் - லீவு - மருத்துவம் - பதவி உயர்வு போன்றவை) விகிதாசார அடிப்படையில் வழங்கவும் இயலும் என்ற அற்புதமான ஆலோசனையை ம...