மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு: 30
தோழர் ஜி ராஜாமணி in Face Book:
இன்னைக்கு , வேறொரு புத்தகத் தைப் படிப்போம் என்கிற எண்ணத் தோடு, புதுசா ஒண்ணை எடுத்து பக்கத்தைப் புரட்டினேன். அறிமுக உரையே அசத்தலாக இருந்தது.
அது மட்டும் இன்றி, நூலாசிரியர், TNGEA அமைப்பின் முன்னாள் தமிழ் மாநில பொதுச் செயலராக இருந்தவர் என்பதோடு, என்னுடைய
ஆசானின் குருகுலத்தில், எனக்கு முன் தத்துவம் பயின்ற சீனியர் மாணவர் என்பதும் தெரிய வந்தது.
வரிகளின் வழியே விழிகள் ஓடின.
முதல் பத்தியில் அவர் கூறியிருப்ப தாவது:
" மத்திய அரசு ஊழியர்களின் தலைவரான, C.S. பஞ்சாபகேசன் மார்க்சியத்தை மிக மிக எளிமையாக என்னுள் ஏற்றிய என் குரு.
பிறப்பால் பார்ப்பன சமுகத்தைச் சேர்ந்தவர். அவர் தான் எனக்குப் பார்ப்பனியத்தின் உள் அடக்கங் களை விஞ்ஞான பூர்வமாகப் புரிய வைத்தவர்.
அவருடைய கருத்துக்களின் படி, மார்க்சியம் வெற்றி பெற, மூன்று தளங்களில் ஒரே நேரத்தில் போரட்டம் நடத்த வேண்டும்.
# முதலாவது அரசியலை மக்களிடம்
கொண்டு சேர்க்க அரசியல் போராட்டம்.
# இரண்டாவதாக உற்பத்திக் சாதனங்களை மக்கள் உடைமை ஆக்க பொருளாதாரப் போராட்டங்கள்.
# மூன்றாவதாக மேலிரண்டு போராட்டங்களையும் உணர்வு பூர்வமாக நடத்தக் கருத்துப் போராட்டம். அதாவது வலதுசாரி பற்போக்குத் தத்துவங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பிரச்சாரங்கள் ஆகியனவற்றிற்கு எதிரான போராட்டம்.
இவற்றில் எது ஒன்று நடைபெற வில்லை என்றாலும் எந்த மாற்றமும் நிகழாது என்று எடுத்துக் காட்டுக்களுடன் விளக்குவார்".
நன்றி.
..... "இந்தியாவில் இடதும் வலதும்"
ஆசிரியர். கே. கங்காதரன்.
( இந்தத் தேக்கம் உடைக்கப்பட வேண்டாமா?)
Comments
Post a Comment