GDS ஊழியரை Group E ஊழியராக்குக

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு

பதிவு 26

- K.ராகவேந்திரன்

  முன்னாள் மாபொதுச்செயலர் NFPE

GDS ஊழியரை Group E ஊழியராக்குக - தோழர் CSP-யின் புதிய ஆலோசனை!

GDS ஊழியரை இலாகா ஊழியராக்குக என்பது நமது குரல். 3, 4, 5 மணி நேரம் பணியாற்றும் GDS ஊழியரை எப்படி 8 மணி நேர இலாகா ஊழியராக்குவது என்பது இலாகாவின் பதில். ராயப்பேட்டையில் நடைபெற்ற

ஒரு மாநாட்டில்,  அன்றைய NFPTE மாபொதுச்செயலர் தோழர் O.P.குப்தா பேசும்போது, GDS ஊழியரை இலாகா ஊழியராக அறிவிப்பது நாட்டில் சோஷலிசம் வந்தபின்னரே சாத்தியம் என்றார்! GDS ஊழியரை பகுதி நேர ஊழியர் மட்டுமே (Part Time) என்பது இலாகாவின் நிலை. இந்நிலையில் பல்வேறு ஆலோசனைகள் நம்மால் அரசுக்கு முன்பு வைக்கப்பட்ட காலம். 

அப்போது தோழர் CSP ஒரு அற்புதமான யோசனையை முன்வைத்தார். அதாவது GDS ஊழியரை குரூப் E ஊழியராக்கினால் இலாகா ஊழியராக்கவும் இயலும்; 8 மணிக்குக் குறைவான வேலைநேரம் என்னும் வாதத்திற்கும் பதில் சொல்ல இயலும்; இலாகா ஊழியரின் அனைத்து சலுகைகளும் (ஊதியம் - லீவு - மருத்துவம் - பதவி உயர்வு போன்றவை) விகிதாசார அடிப்படையில் வழங்கவும் இயலும் என்ற அற்புதமான ஆலோசனையை முன்வைத்தார். தோழர் CSP முன்வைத்த அற்புதமான யோசனையை இயக்கம் அன்றைய தினம் ஏற்காதது துரதிருஷ்டமே! காரணம் பிற்காலத்தில் குரூப் D கேடரே ஒழிக்கப்படுவதும்; அனைவரும் குரூப் C எனப்படுவதும் ஊதியக்குழு மற்றும் அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆகவே இன்றைக்கு குரூப் -E என்ற கோரிக்கை எழுப்பவே இயலாத நிலை உருவாகிவிட்டது. 

ஆழமாகப் பரிசீலித்தால் தோழர் CSP அன்று முன்வைத்த குரூப் E அந்தஸ்து என்ற கோரிக்கை GDS ஊழியரை இலாகா ஊழியராக்க சரியான கோரிக்கை என்பது உணரப்படும். இப்படி யோசிப்பதென்றால் அது தோழர் CSP அவர்களால் மட்டுமே சாத்தியப்பட்ட அம்சம். ஒருவேளை கோரிக்கை இயக்கத்தால் ஏற்கப்பட்டு அரசுக்கு முன் வைக்கப்பட்டிருந்தால், பின்னால் நான்காம் பிரிவு கேடரையே அரைவேக்காட்டுத் தனமாக ரத்து செய்ய அரசுக்கு வழி ஏற்பட்டிருக்காது. 

தீர்க்க சிந்தனையோடு கோரிக்கைகளை உருவாக்கும் தோழர் CSP-யின் பாங்கினை நாம் அனைவரும் இன்று உணர்ந்து கோரிக்கைகளை உருவாக்குவது காலத்தின் அவசியத் தேவை!

Comments

Popular posts from this blog

My periappa and periamma

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்