Posts

Showing posts from May, 2024

எனக்குள் ஒருவர்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு:31 எனது இளைய சகோதரன் சி பி சந்திரசேகரன் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு முடித்த உடனே பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க்காக பணியில் சேர்ந்து விட்டார். 19 வயதில் துவங்கிய கட்சிப் பணியும் சங்க பணியும் இன்று வரை இடைவிடாமல் தொடர்கிறது. காஞ்சிபுரத்தில் 35க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். 1974 முதல் 14 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கட்சியில் ஈர்த்து இணைத்துள்ளார். அவர்களில் பலர் பின்னாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள்.  அதன் பிறகு சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பில் திரும்பட செயலாற்றி உள்ளார். அவர் எங்களது தந்தை தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நினைவு நாளில் தனது நினைவை பகிர்ந்துள்ளார். *"எனக்குள் ஒருவர்..."* *ஒரு அநீதியை கண்டு உணர்ச்சிவசப்பட்டு வெகுண்டு எழும் இளைஞனை பார்த்து 40 வயதிற்குள் நீ ஒரு கம்யூனிஸ்ட் ஆக இல்லை என்றால் உனக்குள் ஏதோ கோளாறு என்று அர்தம். அதே 40 வயதை தாண்டிய பிறகும் நீ கம்யூனிஸ்ட் ஆக இருந்தால் அப்போதும் உனக்குள...

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு: 30 தோழர் ஜி ராஜாமணி in Face Book: இன்னைக்கு , வேறொரு புத்தகத் தைப் படிப்போம் என்கிற எண்ணத் தோடு,  புதுசா ஒண்ணை எடுத்து பக்கத்தைப் புரட்டினேன்.  அறிமுக  உரையே அசத்தலாக இருந்தது.   அது மட்டும் இன்றி, நூலாசிரியர், TNGEA அமைப்பின் முன்னாள் தமிழ் மாநில பொதுச் செயலராக இருந்தவர் என்பதோடு, என்னுடைய ஆசானின் குருகுலத்தில், எனக்கு  முன்  தத்துவம் பயின்ற சீனியர் மாணவர் என்பதும் தெரிய வந்தது.   வரிகளின் வழியே விழிகள் ஓடின. முதல் பத்தியில் அவர் கூறியிருப்ப தாவது:    " மத்திய அரசு ஊழியர்களின் தலைவரான, C.S. பஞ்சாபகேசன் மார்க்சியத்தை மிக மிக எளிமையாக என்னுள் ஏற்றிய என் குரு. பிறப்பால் பார்ப்பன சமுகத்தைச் சேர்ந்தவர்.  அவர் தான்  எனக்குப்  பார்ப்பனியத்தின்  உள் அடக்கங் களை  விஞ்ஞான  பூர்வமாகப்  புரிய வைத்தவர். அவருடைய  கருத்துக்களின் படி, மார்க்சியம்  வெற்றி பெற, மூன்று  தளங்களில்  ஒரே நேரத்தில் போரட்டம்  நடத்த வேண்டும். #  முதலாவது அரசியல...