Posts

Showing posts from January, 2024

My periappa and periamma

 On this momentous occasion of Periappa's birth centenary remembrance, I am filled with immense gratitude and appreciation for the legacy he had left behind.  His life has been a source of inspiration, and today, as we commemorate his hundred years, I want to express my heartfelt thanks for the wisdom and love he shared with us. My Perriamma and Perriappa played a vital role in my career.They both were very lovable and very affectionate persons. My sincere Thanks and gratitude to both of them.  Periappa was an interesting person, voracious reader , a humorous admirable person. He was a walking encyclopedia. He could talk about any subject from Ramayanam,Mahabaratham ,Barathiyar to Carl Marx, Lenin etc. He was able to analyze and argue any subject to the nook and corner. He could attract all persons from kids to old people.   His dedication towards worker's union was remarkable. He was an employee of Postal service. During his service he served as an union leader...

பிள்ளைகள் அனைவரும் இயக்கத்தில்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 28 சி.எஸ்.பி தன் பிள்ளைகள் அனைவரையுமே  இடதுசாரி இயக்கத்தில் ஈடு படுத்தியுள்ளார் என்று பெருமையாக குறிப்பிடுவார்கள். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் இடதுசாரி கருத்துக்களை எனக்குள் எப்படி பதிய வைத்தார் என்று நிகழ்வுகளாக குறிப்பிட்டிருந்தேன். இடதுசாரி இயக்கத்தில் எவ்வாறு ஈடுபடுத்தினார் என்பதை இந்த பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். குடியிருப்புடன் இணைந்த காட்பாடி எக்ஸ்டென்ஷன் போஸ்ட் ஆஃபீஸில் அப்பா வேலை செய்த போது எதிர் வாடையில் குடியிருந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டிலேயே ஒரு ஆங்கில மருந்து கடை துவங்கினர். அப்பா அக்கவுன்டன்சி படித்துவிட்டு கூட்டுறவு சங்கத்தில் முதன் முதலில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த மருந்து கடைக்கு வேண்டிய கணக்குகளை எப்படி வைக்க வேண்டும் என்று துவக்க நிலை உதவிகளை செய்து தந்தார். அதே நேரத்தில்தான் 1960 அகில இந்திய தபால் தந்தி வேலை நிறுத்தம் வந்து, அதில் முன்னணி பாத்திரம் வகித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ஓரிரு மாதங்களுக்கு பிறகு பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டு தாற்காலிக பணி நீக்கத்தில் சில மாதங்கள் வைக்கப...

வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967)

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு: பதிவு 27     - ரா. ஜெகதீசன், AIIEA வேலூர் கோட்ட முன்னாள் பொதுச் செயலாளர், AIIEA முன்னாள் ஒர்கிங் கமிட்டி உறுப்பினர் வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967) 1960களில் வேலூரில் தொழிற்சங்க இயக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பீடித் தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஆவர். மின்னணு இயந்திரங்களை LICயில் திணிக்கும் முடிவை காங்கிரஸ் ஒன்றிய அரசு எடுத்தது. மும்பையில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது எளிதாக ஓர் இயந்திரத்தை LICயில் நிறுவினர்(1965). இரண்டாம் இயந்திரத்தை கொல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டபோது மேற்கு வங்கத் தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. அப்போது தோழர் ஞானையா (NFPTE)  தலைவராகவும் தோழர் சரோஜ் சவுத்ரி (AIIEA) செயலாளராகவும் கொண்ட ஓரமைப்பு இயந்திரமயமாக்கலை எதிர்க்க உருவாக்கப்பட்டது. LICயில் வேலைநிறுத்தங்கள் நடக்கும்போது அஞ்சல் துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஆதரவளித்தன. இத்தருணத்தில் சி.எஸ்.பி. நகரத் தொழிற்சங்கங்களை இணைக்க முயற்சி செய்வதில் வெற்றி பெற்றார். கு.மா. பாலசுப்ரமணியம் (RMS-NFPTE) தலைவராகவும் நான் (AI...

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 26 - K.ராகவேந்திரன்   முன்னாள் மாபொதுச்செயலர் NFPE GDS ஊழியரை Group E ஊழியராக்குக - தோழர் CSP-யின் புதிய ஆலோசனை! GDS ஊழியரை இலாகா ஊழியராக்குக என்பது நமது குரல். 3, 4, 5 மணி நேரம் பணியாற்றும் GDS ஊழியரை எப்படி 8 மணி நேர இலாகா ஊழியராக்குவது என்பது இலாகாவின் பதில். ராயப்பேட்டையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில்,  அன்றைய NFPTE மாபொதுச்செயலர் தோழர் O.P.குப்தா பேசும்போது, GDS ஊழியரை இலாகா ஊழியராக அறிவிப்பது நாட்டில் சோஷலிசம் வந்தபின்னரே சாத்தியம் என்றார்! GDS ஊழியரை பகுதி நேர ஊழியர் மட்டுமே (Part Time) என்பது இலாகாவின் நிலை. இந்நிலையில் பல்வேறு ஆலோசனைகள் நம்மால் அரசுக்கு முன்பு வைக்கப்பட்ட காலம்.  அப்போது தோழர் CSP ஒரு அற்புதமான யோசனையை முன்வைத்தார். அதாவது GDS ஊழியரை குரூப் E ஊழியராக்கினால் இலாகா ஊழியராக்கவும் இயலும்; 8 மணிக்குக் குறைவான வேலைநேரம் என்னும் வாதத்திற்கும் பதில் சொல்ல இயலும்; இலாகா ஊழியரின் அனைத்து சலுகைகளும் (ஊதியம் - லீவு - மருத்துவம் - பதவி உயர்வு போன்றவை) விகிதாசார அடிப்படையில் வழங்கவும் இயலும் என்ற அற்புதமான ஆலோசனையை ம...

துறை விசாரணைகளை எதிர் கொள்வதில் தெளிவு

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 25 - ஆதிவராகன் ஓய்வு பெற்ற பொறியாளர் மொழிபெயர்ப்பாளர் தொடர்ச்சி:தோழர் CSP  அவர்கள், 1968ல் நடந்த மத்திய அரசுஊழியர் நடத்திய மகத்தான (நாடுதழுவிய) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஆற்றிய பணிகுறித்து நம் தோழர்கள் அனைவரும் அறிவர். ஆனால் அந்த வேலைநிறுத்தம் முடிந்ததும் அவருக்குத்தரப்பட்ட  CHARGE- SHEET  பற்றிய தகவல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்காது. வேலைநிறுத்தம் முடிந்து, Suspension etc எல்லாம் முடிந்து, அவர் பணியில் சேர்ந்ததும், அவர்மீது CCS(CCR) Rules14 படி குற்றப்பத்திரிகை தரப்பட்டது. அதில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. அதில் முதல் குற்றச்சாட்டு: அவர்  மத்திய அரசு ஊழியர் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார் என்பது. அதற்கு அவர் தமது பதிலில், "நான் மேற்கூறிய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டேன் என்ற குற்றச்சாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த வேலைநிறுத்தம் என்பது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்த ஒன்று. ஊதிய மாற்றம் ஆகிய அடிப்படைப் பிரச்சி...

பில்கேட்ஸ் பானுவுக்கு நீதி

 https://www.facebook.com/share/p/5upxoqML3Wa9UMvQ/?mibextid=qi2Omg தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு  24 அநீதிக்கு எதிரான, கோப  ஆவேசமான, தெளிவான விளக்கம். உறங்கிக் கிடக்கும் நியாய உள்ளங்கள் விழித்தெழ வேண்டும் என்பதற்கான முனைப்போடு அமைந்துள்ளது. நீதிக்காக போராடிய இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் முன் முயற்சி வீண் போகாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற துடிப்புடன் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் அப்பாவின் ஆவேசத்தை காண்கின்றேன்.

ஆசான் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன்

தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 23 - ஆதிவராகன்    ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் பொறியாளர்    மொழிபெயர்ப்பாளர் நமது ஆசான் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் பற்றி விரிக்கின் எஞ்சும்; சுருக்கின் பெருகும். பொதுவாக முற்போக்காளர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை! நினைவு நாளில்தான் அஞ்சலி செலுத்தி இயற்கை எய்தியவரின் தியாகங்களை நினைவு கூர்வது வழக்கம். அதுபற்றி  தோழர் சி.எஸ்.பி.தான் எனக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது  ஒரு மனிதன் பிறக்கும்போதே பெரிய மனிதனாகப் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து மக்கள் பணியாற்றி தன் தியாக பூர்வ நடவடிக்கைகள் மூலம்தான் ஒருவன் பெரிய மனிதனாகப் பரிணமிக்கிறான்; எனவே ஒரு  மனிதனின் நினைவு நாள்தான் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார். அந்த வகையில் நினைவு கூறத் தக்க வாழ்ந்தவர் தோழர் சி.எஸ்.பி. அதேபோன்று, அவர் தாம் வகுப்புகள் நடத்தும் போதும், கூட்டங்களில் பேசும்போதும் கடைசி நேரத்தில் வந்து  அவசரம், அவசரமாகப் பேசிவிட்டு, தம் கடமை முடிந்ததும் உடனே கிளம்பிச் செல்ல மாட்டார். கூட்டம் துவங்குவதற்கு   முன்னமே வந்து விடுவார...

தோழர் சி.எஸ்.பி காட்டிய வழிமுறைகள்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 22    - N.L.Sridharan   அகில இந்திய மாநில அரசு          ஓய்வூதியர் சம்மேளன பொதுசெயலாளர்   முன்னாள் மாநில தலைவர், தமிழ் நாடு   அரசு ஊழியர் சங்கம். தோழர் சி.எஸ்‌.பி அவர்களை வேலூரில் இருக்கும் போது நான் நன்கு அறிவேன். அப்பொழுது நான் காஞ்சிபுரத்தில்  பணியாற்றிக் கொண்டிருந்தேன் . பலமுறை அவரை காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்து வகுப்புகள் எடுக்க வைத்திருக்கிறேன். அதன் பயனாக தோழர்கள் ராமு மற்றும் சுந்தரேசன் போன்றபலர் எனக்கு தோழர்களாக கிடைத்தனர்.   காஞ்சிபுரத்தில் மத்திய மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும்படி தோழர் சி.எஸ.பி எங்களுக்கு ஆலோசனை கூறினார். அதன்படி ஒரு அமைப்பை உருவாக்கி, அஞ்சல் துறை சார்ந்த தோழர் வெங்கட்ராமன் தலைவராகவும் நான் பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்பேற்றோம் . எனக்குப் பின்பு அந்தக் அமைப்பை தோழர் சி.பி.சந்திரசேகரன் மற்றும் பி.ராமுவும் அற்புதமாக வளர்த்தெடுத்தனர்.  அந்த அமைப்பின் மூலமாக  பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று கணக்கு வைத்தல் தொடர்பாக தோழர் சி.எஸ்...

தோழர் CSP - எதையும் விசாரணையின்றி அச்சேற்றமாட்டார். தோழர் C.S.பஞ்சாபகே

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 21              - K.ராகவேந்திரன்                முன்னாள்மாபொதுச்செயலர் NFPE                              தோழர் CSP - எதையும் விசாரணையின்றி அச்சேற்றமாட்டார். தோழர் C.S.பஞ்சாபகேசன் உழைக்கும் வர்க்கம் மாத ஏட்டின் நிறுவன ஆசிரியர். தீர விசாரிக்காமல் எதையும் பிரசுரிக்கக் கூடாது என்பது அவரின் ஆழமான கொள்கை. உழைக்கும் வர்க்கம் இதழில் எழுதப்படும் எதையும் யாரும் உண்மையல்ல என்று மறுத்துச் சொல்லிவிடக்கூடாது என்பதை ஒரு நடைமுறையாகக் கொண்டு செயல்பட்டவர் தோழர் CSP. அதனால் தான் உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்கள் யாவும் எல்லோராலும் ஏற்கப்பட்டன. இந்த அனுபவம் உழைக்கும் வர்க்கம் இதழோடு நெருங்கிய தொடர்புகள் கொண்ட எனக்குப் புதியவை அல்ல என்றாலும் ஒரு நிகழ்வினை  இங்கே சுட்டுக்காட்ட விழைகிறேன். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஐந்தாம் ஊதியக்குழு அமைக்கப்பட்ட காலம். NFPE மாபொதுச்செயலர்  தோழர் ஆதி முயற்சியில் 1993-ம...

தோழர் கே.ஜி.போஸ்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 20 அப்பாவின் தபால் தந்தித் துறை ஊழியர் சங்கமான NFPTE யின் தலைவர் K.G.Bose சிகிச்சைக்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு  வந்திருந்தார். கல்லூரி விடுமுறை நாட்களானதால் அப்பா என்னை அவரோடு மருத்துவ மனைக்கு அனுப்பினார். அதுதான் என் முதல் சிஎம்சி உதவி பணி. Broken English பேச கிடைத்த முதல் வாய்ப்பு. K.G.Bose என்னை பெருமையாக பார்த்து மகிழ்ந்தார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. அவரிடம் பேசியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.  நான் அரசியலில் என்ன மாதிரி பங்கேற்கப் போகிறேன் என்ற அவரின் கேள்விதான் என்னுள் பெரிதாக உழன்று கொண்டே இருந்தது. அப்பா எனக்கு சொல்லி தந்திருக்கும் மார்க்சிய கல்வியை, அறிவை நடை முறையில் கொண்டு வர என்னவெல்லாம் சாத்தியம் என்ற சிந்தனையும் சுற்றி சுற்றி வந்தது.

சி்.எஸ்.பியும் நானும்

 சி.எஸ். பஞ்சாபகேசன் நூற்றாண்டு பதிவு 19          - ரா. ஜெகதீசன்             AIIEA வேலூர் கோட்ட முன்னாள்.                     பொதுச் செயலாளர்,               AIIEA முன்னாள் ஒர்கிங் கமிட்டி               உறுப்பினர்             சி்.எஸ்.பியும் நானும் 1. சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களுடன் ஏற்பட்டச் சந்திப்பு  நான் திருவண்ணாமலை எல்.ஐ்.சி.கிளையில் இருந்து மாறுதல் பெற்று வேலூர் கிளைக்கு 1965 இறுதியில் வந்தேன். அடுத்த ஆண்டே இக்கிளையின் சங்கச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். வேலூர் அஞ்சல் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் சங்கம் அழைக்கப்பட்ட போது நாங்கள் கலந்து கொண்டோம். அங்கு நான் உரையாற்றியதைக் கவனித்த சி.எஸ்.பி என்னைப் பாராட்டினார். அப்போது அவர் தொழிற்சங்க வகுப்புகளுக்கு என்னை அழைத்தார். அப்போது அவர் ஆற்றிய ஜனரஞ்சகமான உரை என்னைக் கவர்ந்தது. அன்...

தோழர் CSP - கொள்கைக்காக உயர் பதவியையே தூக்கி எறிந்த மகத்தான தலைவர்!

தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு 18 தோழர் CSP - கொள்கைக்காக உயர் பதவியையே தூக்கி எறிந்த மகத்தான தலைவர்! அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து சங்கத்தின் பதவிக்குரிய கெளரவத்தை உயர்த்திப் பிடித்து வந்தார் தோழர் CSP. அப்போது வேலூர் கோட்டத்தின் கோட்ட ஆண்டுப் பேரவை நடைபெற்றது. வேலூர் கோட்டம் தமிழ் மாநில சங்கத்திற்கு உட்பட்டது. அக்கோட்டத்தின் அஞ்சல் மூன்று அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் மாநாட்டில் கலந்து கொண்டு நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தோழர் CSP-யும் போட்டியிட்டார். கோட்டத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்ட தோழர் CSP குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  நடைபெற்றது ஒரு கோட்டத் தேர்தல். மாநிலத் தலைவர் பொறுப்பை வழங்கியவர்கள் தமிழ் மாநிலத்தின் அனைத்துக் கோட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள். ஆனால், ஒரு கோட்டத்தின் தலைவராகப் போட்டியிட்ட தன்னை வேலூர் கோட்ட ஊழியர்கள் ஏற்காத நிலையில், தமிழ் மாநிலத் தலைவராக நீடிப்பதற்குத் தனக்குத் தார்மீக உரிமையில்லை என்று கூறித் தன் உயர் பதவியை  ராஜினாமா செய்தார் தோழர் CSP! அவசியமே இல்லை: மாநி...

அருமைத் தோழர் சிஎஸ்பி

தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு 17     -  எஸ்.மோகன்தாஸ்        அகில இந்திய துணைத் தலைவர்,                 All India BSNL-DOT Pensioners Association.        (AIBDPA) அருமைத் தோழர் சிஎஸ்பி வேலூரில் அஞ்சல் துறையில் பணி புரிந்தாலும், தொலைத் தொடர்பு நான்காம் பிரிவு ஊழியர் அமைப்பிலும் பங்கு வகித்தார். அவர்களுடைய அகில இந்திய மாநாடு பம்பாயில் நடைபெற்றபோது மாநாட்டுப் பிரதிநிதியாக தமிழகத்திலிருந்து கலந்து கொண்டார். அங்கு அவருடைய கருத்துக்கு கருத்தால் பதில் கூறமுடியாத நபர்கள்  வன்முறையில் ஈடுபட்டபோது  தோழர் சிஎஸ்பி குறிவைத்து தாக்கப் பட்டார். அதில் சிஎஸ்பி யின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.  அகில இந்திய அளவில் அஞ்சல் தொழிற்சங்க பகுதியிலும்  அதேசமயம் தொலைத்தொடர்பு தொழிற்சங்க பகுதியிலும் அமைப்பு ரீதியாக பங்கு பெற்றிருந்த அருமைத் தோழர் K. G. போஸுக்கு அடுத்தாற்போல, இந்த இரண்டு தொழிற்சங்க அமைப்புகளிலும் பங்கு பெற்றிருந்த ஒரே தலைவர் எனக்குத் தெரிந்து அருமைத் தோழர் சிஎஸ்பி த...

தோழர் CSP - குடும்ப ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்தவர்!

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு: பதிவு 16. தோழர் CSP - குடும்ப ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்தவர்!           - K.ராகவேந்திரன்              முன்னாள் மாபொதுச்செயலர் NFPE 1982-ம் வருடம். நான் அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கத்தில் உதவி மாநிலச் செயலராகப் பொறுப்பில் இருந்தேன். சென்னை ஓட்டல் அறை ஒன்றில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். தோழர் CSP, BVS உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கு பெற்ற கூட்டம். இரு நாட்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் கூட்டம் இரவு எட்டு மணி அளவில் முடிவடைந்து தோழர் CSP உள்ளிட்ட அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றோம். அடுத்த நாள்  கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் வந்து விட்டோம். தோழர் சிஎஸ்பி வழக்கத்தை விட உற்சாகமாக காணப்பட்டார். கூட்டம் துவங்கு முன்பே நாங்கள் எல்லாம் அவரை சூழ்ந்து கொண்டு ஏதோ சொல்லப்போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தோம்.  தன் ஜோல்னா பையில் இருந்து பெரிய ஸ்வீட் பாக்கெட் எடுத்தார். எங்களைப் பார்த்து 'நேற்று ஒரு விசேஷமான நாள். என்னவென்று யாராவது கூற...

கம்யூனிஸ்ட் அறிக்கை

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு. பதிவு 15 1970களில் அப்பா நிறைய வகுப்புகள் எடுப்பார். 1. கம்யூனிஸ்ட் அறிக்கை 2. பரிணாம வளர்ச்சி 3. இயக்கவியல் பொருள்முதல் வாதம் 4. வரலாற்றியல் பொருள் முதல் வாதம். 5. சுதந்திர போராட்டத்தில் தொழிலாளர் பங்கு  6. இந்திய தொழிற்சங்க வரலாறு  ஆகிய வகுப்புகள் பல முறை நடத்தியிருக்கிறார்.  வரையறைகளை எளிமையாக சொல்லுவார். விஞ்ஞான சோசலிசம் என்றால் என்ன? எல்லோருக்கும் என்ன தேவை?  எப்படி உற்பத்தி செய்வது?  எப்படி விநியோகிப்பது? உற்பத்தியிலும், விநியோகத்திலும் எப்படி எல்லோரையும் வேலைக்கு அமர்த்துவது?  இதுதான் விஞ்ஞான சோசலிசம் என்று கூறி வகுப்பை தொடங்குவார்.  இதற்கென ஓரிரு நாட்கள் வள்ளி மலை, காட்பாடி டவுன்ஷிப் போன்ற இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் முகாம்கள் நடந்துள்ளன. பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவற்றில் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று தமிழ்நாட்டின் பல ஊர்களில் வகுப்பு நடத்தியிருக்கிறார். ஒவ்வொருமுறை வகுப்பெடுக்கும் போதும் தன்னுடைய குறிப்புகளில் நடப்பு தகவல்களை சேர்த்து புதுப்பித்துக் கொள்வார். ஒவ்வொரு தலைப்பிலும் பல ...