தோழர் CSP - கொள்கைக்காக உயர் பதவியையே தூக்கி எறிந்த மகத்தான தலைவர்!
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு.
பதிவு 18
தோழர் CSP - கொள்கைக்காக உயர் பதவியையே தூக்கி எறிந்த மகத்தான தலைவர்!
அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து சங்கத்தின் பதவிக்குரிய கெளரவத்தை உயர்த்திப் பிடித்து வந்தார் தோழர் CSP. அப்போது வேலூர் கோட்டத்தின் கோட்ட ஆண்டுப் பேரவை நடைபெற்றது. வேலூர் கோட்டம் தமிழ் மாநில சங்கத்திற்கு உட்பட்டது. அக்கோட்டத்தின் அஞ்சல் மூன்று அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் மாநாட்டில் கலந்து கொண்டு நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தோழர் CSP-யும் போட்டியிட்டார். கோட்டத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்ட தோழர் CSP குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நடைபெற்றது ஒரு கோட்டத் தேர்தல். மாநிலத் தலைவர் பொறுப்பை வழங்கியவர்கள் தமிழ் மாநிலத்தின் அனைத்துக் கோட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள். ஆனால், ஒரு கோட்டத்தின் தலைவராகப் போட்டியிட்ட தன்னை வேலூர் கோட்ட ஊழியர்கள் ஏற்காத நிலையில், தமிழ் மாநிலத் தலைவராக நீடிப்பதற்குத் தனக்குத் தார்மீக உரிமையில்லை என்று கூறித் தன் உயர் பதவியை ராஜினாமா செய்தார் தோழர் CSP! அவசியமே இல்லை: மாநில மாநாட்டின் பிரதிநிதிகள் வேறு, கோட்ட மாநாட்டின் உறுப்பினர்கள் வேறு. ஆனாலும் மாநிலத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். வேறு எவரும் செய்ய முன்வராத செயலை தோழர் CSP செய்தார். இது அவரது ஜனநாயக மாண்பைக் காட்டுகிறது. அவரது கொள்கைப் பிடிப்பைக் காட்டுகிறது. அவர் வழி வந்தவர்கள் தான் தமிழக K.G.போஸ் அணியினர் என்பதை பிற்காலத்தில் பல நிகழ்வுகள் மூலம் நிரூபித்தவர்கள் K.G.போஸ் அணியினர்.
இந்த உயர் கொள்கையைப் போதித்தவர் - நடைமுறையில் தயங்காமல் கொள்கையை உயர்த்திப் பிடித்த தலைவர் தோழர் CSP!
அணி முழுவதற்கும் சரியான வழிகாட்டிய தலைமை மாண்புகள் மிக்க தலைவர் தான் தோழர் CSP! அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
K.ராகவேந்திரன்
முன்னாள்
மாபொதுச்செயலர் NFPE
Comments
Post a Comment