சி்.எஸ்.பியும் நானும்
சி.எஸ். பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 19
- ரா. ஜெகதீசன்
AIIEA வேலூர் கோட்ட முன்னாள்.
பொதுச் செயலாளர்,
AIIEA முன்னாள் ஒர்கிங் கமிட்டி
உறுப்பினர்
சி்.எஸ்.பியும் நானும்
1. சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களுடன் ஏற்பட்டச் சந்திப்பு
நான் திருவண்ணாமலை எல்.ஐ்.சி.கிளையில் இருந்து மாறுதல் பெற்று வேலூர் கிளைக்கு 1965 இறுதியில் வந்தேன். அடுத்த ஆண்டே இக்கிளையின் சங்கச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். வேலூர் அஞ்சல் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் சங்கம் அழைக்கப்பட்ட போது நாங்கள் கலந்து கொண்டோம். அங்கு நான் உரையாற்றியதைக் கவனித்த சி.எஸ்.பி என்னைப் பாராட்டினார். அப்போது அவர் தொழிற்சங்க வகுப்புகளுக்கு என்னை அழைத்தார். அப்போது அவர் ஆற்றிய ஜனரஞ்சகமான உரை என்னைக் கவர்ந்தது.
அன்று அவருடன் ஏற்பட்டத் தொடர்பு நகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றும் அளவுக்கு என்னை உயர்த்தியது. வரும் நாட்களில் அந்த வளர்ச்சியை என் நினைவிலிருந்து பதிவிட முயற்சி செய்வேன்.
Comments
Post a Comment