தோழர் சி.எஸ்.பி காட்டிய வழிமுறைகள்
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 22
- N.L.Sridharan
அகில இந்திய மாநில அரசு
ஓய்வூதியர் சம்மேளன பொதுசெயலாளர்
முன்னாள் மாநில தலைவர், தமிழ் நாடு
அரசு ஊழியர் சங்கம்.
தோழர் சி.எஸ்.பி அவர்களை வேலூரில் இருக்கும் போது நான் நன்கு அறிவேன். அப்பொழுது நான் காஞ்சிபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் . பலமுறை அவரை காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்து வகுப்புகள் எடுக்க வைத்திருக்கிறேன். அதன் பயனாக தோழர்கள் ராமு மற்றும் சுந்தரேசன் போன்றபலர் எனக்கு தோழர்களாக கிடைத்தனர்.
காஞ்சிபுரத்தில் மத்திய மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும்படி தோழர் சி.எஸ.பி எங்களுக்கு ஆலோசனை கூறினார். அதன்படி ஒரு அமைப்பை உருவாக்கி, அஞ்சல் துறை சார்ந்த தோழர் வெங்கட்ராமன் தலைவராகவும் நான் பொதுச் செயலாளர் ஆகவும் பொறுப்பேற்றோம் . எனக்குப் பின்பு அந்தக் அமைப்பை தோழர் சி.பி.சந்திரசேகரன் மற்றும் பி.ராமுவும் அற்புதமாக வளர்த்தெடுத்தனர். அந்த அமைப்பின் மூலமாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதேபோன்று கணக்கு வைத்தல் தொடர்பாக தோழர் சி.எஸ்.பி அவர்களை பின் பற்றிடும்படி தோழர் பி.ஆர்.பி எனக்கு அறிவுறுத்தினார்.
தோழர் சி.எஸ்.பி யிடம் ஓரளவு மார்க்சியத்தை கற்றேன். இன்றளவும் தொழிற்சங்க இயக்கத்தில் சி.எஸ்.பி காட்டிய வழிமுறைகள் எனக்கு பயனுள்ளதாக அமைந்து வெற்றியைத் தேடித் தந்துள்ளன.
2003ல் 172000பேர் மீது TESMAவை முன்தேதியிட்டு அமுல் படுத்தியபோது அவர்களை காப்பாற்ற அச்சமின்றி சங்கத்தை நடத்த தோழர் சி.எஸ்.பி. கற்பித்தவை எனக்கு வழி காட்டின.
தோழர் சி.எஸ்.பி பழகுவதற்கு எளிமையானவர். அவர் தான் கொண்ட கொள்கை கருத்துகளை பிறரிடம் பசுமரத்தாணி போல பதிய வைப்பார்.
தொடர்ந்து அவர் வழி நடப்போம். தோழர் சி.எஸ்.பி புகழ் வாழ்க. தோழருக்கு செவ்வணக்கம்.
Comments
Post a Comment