தோழர் கே.ஜி.போஸ்
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 20
அப்பாவின் தபால் தந்தித் துறை ஊழியர் சங்கமான NFPTE யின் தலைவர் K.G.Bose சிகிச்சைக்காக சி.எம்.சி மருத்துவமனைக்கு வந்திருந்தார். கல்லூரி விடுமுறை நாட்களானதால் அப்பா என்னை அவரோடு மருத்துவ மனைக்கு அனுப்பினார். அதுதான் என் முதல் சிஎம்சி உதவி பணி. Broken English பேச கிடைத்த முதல் வாய்ப்பு. K.G.Bose என்னை பெருமையாக பார்த்து மகிழ்ந்தார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. அவரிடம் பேசியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நான் அரசியலில் என்ன மாதிரி பங்கேற்கப் போகிறேன் என்ற அவரின் கேள்விதான் என்னுள் பெரிதாக உழன்று கொண்டே இருந்தது. அப்பா எனக்கு சொல்லி தந்திருக்கும் மார்க்சிய கல்வியை, அறிவை நடை முறையில் கொண்டு வர என்னவெல்லாம் சாத்தியம் என்ற சிந்தனையும் சுற்றி சுற்றி வந்தது.
Comments
Post a Comment