வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967)

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு:

பதிவு 27

    - ரா. ஜெகதீசன், AIIEA வேலூர் கோட்ட முன்னாள் பொதுச் செயலாளர்,

AIIEA முன்னாள் ஒர்கிங் கமிட்டி உறுப்பினர்

வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (1967)

1960களில் வேலூரில் தொழிற்சங்க இயக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பீடித் தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஆவர். மின்னணு இயந்திரங்களை LICயில் திணிக்கும் முடிவை காங்கிரஸ் ஒன்றிய அரசு எடுத்தது. மும்பையில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது எளிதாக ஓர் இயந்திரத்தை LICயில் நிறுவினர்(1965). இரண்டாம் இயந்திரத்தை கொல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டபோது மேற்கு வங்கத் தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. அப்போது தோழர் ஞானையா (NFPTE)  தலைவராகவும் தோழர் சரோஜ் சவுத்ரி (AIIEA) செயலாளராகவும் கொண்ட ஓரமைப்பு இயந்திரமயமாக்கலை எதிர்க்க உருவாக்கப்பட்டது. LICயில் வேலைநிறுத்தங்கள் நடக்கும்போது அஞ்சல் துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஆதரவளித்தன. இத்தருணத்தில் சி.எஸ்.பி. நகரத் தொழிற்சங்கங்களை இணைக்க முயற்சி செய்வதில் வெற்றி பெற்றார். கு.மா. பாலசுப்ரமணியம் (RMS-NFPTE) தலைவராகவும் நான் (AIIEA) செயலாளராகவும் கொண்ட வேலூர் நகரத் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு உருவானது.

வேலூர் தலைமை அஞ்சலகக் கட்டிடம்.

ஊரிசுக் கல்லூரி எதிரில் இருந்த தனியார் கட்டிடத்திலிருந்து சொந்தக் கட்டிடத்திற்குத் தலைமை அஞ்சலகம் மாறிய போது எங்கள் LIC கிளை அங்கு வந்தது. இக்கட்டிடத்தின் மாடியை மனமகிழ் மன்றத்திற்கு நாங்கள் போராடிப் பெற்றோம். இப்பகுதியை நாங்கள் தொழிற்சங்கத்திற்கும் பயன்படுத்தினோம். நகரத் தொழிற்சங்க இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் இங்குக் கூட்டப்பட்டன. பணியிலும் தொழிற்சங்க இயக்கத்திலும் முழுமையாக ஈடுபட்ட  சி.எஸ்.பி. இக்கட்டிடத் தொடர்பிலிருந்து விடுபடவில்லை!

இக்கட்டிடம் கண்ட சில தொழிற்சங்க இயக்கத் தொடர்புகளை நான் நினைவுகூர்கிறேன் :

*1960 மத்தியரசு ஊழியர் வேலைநிறுத்தம்

* LIC LOCKOUT வேலைநிறுத்தம்

*1974ல் நடந்த இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கைதாகி வேலூரில் பிணைக் கைதிகளாகத் தங்கியிருந்த தொழிலார்களுக்கு ஆதரவு ஏற்பாடுகள்

*DKM கல்லூரி ஆசிரியர் தொடர் வேலைநிறுத்தத்தின் போது அவரகளுக்கு ஆதரவு தரும் ஆலோசனைக் கூட்டங்கள்.

                  .... தொடரும்

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்