ஆசான் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன்
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 23
- ஆதிவராகன்
ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் பொறியாளர்
மொழிபெயர்ப்பாளர்
நமது ஆசான் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் பற்றி விரிக்கின் எஞ்சும்; சுருக்கின் பெருகும். பொதுவாக முற்போக்காளர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை! நினைவு நாளில்தான் அஞ்சலி செலுத்தி இயற்கை எய்தியவரின் தியாகங்களை நினைவு கூர்வது வழக்கம். அதுபற்றி தோழர் சி.எஸ்.பி.தான் எனக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது ஒரு மனிதன் பிறக்கும்போதே பெரிய மனிதனாகப் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து மக்கள் பணியாற்றி தன் தியாக பூர்வ நடவடிக்கைகள் மூலம்தான் ஒருவன் பெரிய மனிதனாகப் பரிணமிக்கிறான்; எனவே ஒரு மனிதனின் நினைவு நாள்தான் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார். அந்த வகையில் நினைவு கூறத் தக்க வாழ்ந்தவர் தோழர் சி.எஸ்.பி.
அதேபோன்று, அவர் தாம் வகுப்புகள் நடத்தும் போதும், கூட்டங்களில் பேசும்போதும் கடைசி நேரத்தில் வந்து அவசரம், அவசரமாகப் பேசிவிட்டு, தம் கடமை முடிந்ததும் உடனே கிளம்பிச் செல்ல மாட்டார். கூட்டம் துவங்குவதற்கு முன்னமே வந்து விடுவார்; அதேபோல் கூட்டம் முடிந்த உடன் நீண்டநேரம் அங்கேயே தோழர்கள், தொண்டர்கள், முன்னணிச் செயல் வீரர்களுடன் தொடர்ந்து பேசி, கலந்துரையாடி
விவாதிப்பார். அப்போது அவர்கள் எழுப்பும் ஐயங்களுக்கு தக்க விளக்கம் அளிப்பார். தமக்குத் விடை தெரியாத வினாக்கள் தொடுக்கப்படும் போது, 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி' விளக்கங்கள்
தரமாட்டார். "மேல் மட்டத்தில் கேட்டு சொல்கிறேன்; அல்லது சம்பந்தப்பட்ட நூல்களைப் படித்து விளக்கம் தருகிறேன்" எனக் கூறி அவற்றைக் குறித்து வைத்துக் கொள்வார். அதேமாதிரி அடுத்த கூட்டத்தில் அதற்கான பதில், விளக்கம் தருவார். தயங்கி கொண்டு நிற்கும் முன்னணித் தோழர்கள், தொண்டர்களை அவராகவே அழைத்து அவர்களைப் பேச சொல்லிக் கேட்பார். இவ்வாறான கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் பிரச்சினைகளை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்வார். தோழர்களின் குடும்ப விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவார். இவை அனைத்தும் அவர்தம் பொதுவான குணங்கள்.
குறிப்பிட்ட ஒரு தொழிற் சங்கப் போராட்டத்தில் அவரது தெளிவான செயல்பாடு குறித்து நான் ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.
......தொடரும்
Comments
Post a Comment