துறை விசாரணைகளை எதிர் கொள்வதில் தெளிவு
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 25
- ஆதிவராகன்
ஓய்வு பெற்ற பொறியாளர்
மொழிபெயர்ப்பாளர்
தொடர்ச்சி:தோழர் CSP அவர்கள், 1968ல் நடந்த
மத்திய அரசுஊழியர்
நடத்திய மகத்தான (நாடுதழுவிய) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஆற்றிய பணிகுறித்து
நம் தோழர்கள் அனைவரும் அறிவர். ஆனால் அந்த வேலைநிறுத்தம் முடிந்ததும் அவருக்குத்தரப்பட்ட CHARGE- SHEET பற்றிய தகவல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்காது. வேலைநிறுத்தம் முடிந்து, Suspension etc எல்லாம் முடிந்து, அவர் பணியில் சேர்ந்ததும், அவர்மீது CCS(CCR) Rules14 படி குற்றப்பத்திரிகை தரப்பட்டது. அதில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விளக்கம் கோரப்பட்டது. அதில்
முதல் குற்றச்சாட்டு:
அவர் மத்திய அரசு ஊழியர் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார் என்பது. அதற்கு அவர் தமது பதிலில், "நான் மேற்கூறிய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டேன் என்ற குற்றச்சாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த வேலைநிறுத்தம் என்பது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்த ஒன்று. ஊதிய மாற்றம் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளுக்காக விடுக்கப் பட்ட அறைகூவல். இந்த அறைகூவலானது, தபால் தந்தித் துறையில் இருக்கும் (மத்திய அரசால்) அங்கீகரிக்கப்பட்ட ஒரே சம்மேளனமான NFPTE (Natinal Federation of P&T Employees) அறிவித்த அறைகூவல். மேலும் இந்த அறைகூவலானது Industrial Dispute Actன் படி போராட்டத்திற்கான அனைத்து விதிகளையும் ( rules for All-Strike) பின் பற்றி விடுக்கப்பட்ட சட்டபூர்வமான வேலைநிறுத்தம் (Legal strike) நான் மேற்கூறிய NFPTEயில் இணைக்கப்பட்டுள்ள All India Postal Employees Class III Union உறுப்பினர்! மேலும் இந்த Unionன் தமிழ் மாநில அமைப்புச்செயலாளர். எனவே it is my bounden duty to participate in the legal strike called for to achieve the basic demands of our employees! So I am ready to undergo any punishment for this so called 'offence '." என்று கூறினார்.
அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டு: "நீங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதோடு அல்லாமல் தமிழ்நாடுமு ழுவதும் பல ஊர்களில் ( 20, 22 ஊர்கள் பெயர்கள் கொண்ட பட்டியல் இணைக்கப் பட்டிருந்தது. அவை என்நினைவில் இல்லை) இருந்த ஊழியர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தூண்டினீர். நடத்தை விதிகள்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை விட மற்றவர்களை ஈடுபடுமாறு தூண்டியது என்பது மிகவும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம்" என்று கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்த நமது தலைவர் "நீங்கள் நான் பிரச்சாரம் செய்ததாக 20, 22 ஊர்களின் பட்டியலைத்தான் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நான் மேலும் 10, 12 ஊர்களுக்கும் சென்று இந்தத் 'தூண்டுதல்' வேலையையும் செய்துள்ளேன்! இதோ அந்த ஊர்களின் பட்டியல். (அவையும் எனக்கு நினைவில் இல்லை) நான் AIPEU Cl-lIIஇன் தமிழ்நாடு மாநில அமைப்புச்செயலாளர் என்ற முறையில் வேலைநிறுத்தப்பிரச்சாரம் (propaganda of stike) செய்வது என் இன்றியமையாத பணி. அதைத்தான் நான் செய்தேன். அதற்கான தண்டனையையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.
ஆனால், அதே வேலை நிறுத்தில் கலந்து கொண்ட அப்போதைய முன்னணித்தலைவர் ஒருவர் அப்போது அவர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் அவர் தமது விளக்கத்தில் technicalஆக "நான் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை; நான் ELல் தான் இருந்தேன்" என்று கூறி, அதிகாரவர்க்கத் தினருடன் deal செய்யும்போது இவ்வாறு tactical ( நடைமுறைதந்திரம் ) ஆகத்தான் பதில் தரவேண்டும் என்று விளக்கமும் தந்தார் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். பொதுவாக அதிகார வர்க்கத்துடன் deal செய்யும் போது tactical ஆகப் பதில் தருவது என்பது சாதாரண அலுவலர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் மாநில அளவிலான தலைவர்களுக்கு பொருந்தாது என்பது என் தாழ்மையான கருத்து. வாழ்க சி.எஸ்.பி.புகழ்!
Comments
Post a Comment