அம்மா
அப்பாவின் லட்சிய வாழ்க்கைக்கு அடித்தளமே அம்மாதான்.
பெரும்பாலான வார நாட்களில் அலுவலகம் முடிந்த பின், இயக்க பணியை முடித்து கொண்டு இரவு ஒன்பது மணிக்குதான் அப்பா வீடு திரும்புவார். அதே போல் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாலை அலுவலகத்திலிருந்தே இயக்க வேலையாக வெளியூர் சென்று திங்கள் காலை நேராக அலுவலகத்திற்கே திரும்புவார். விடுமுறை நாட்களளிலும் இப்படித்தான்.
வீட்டில் இருக்கும் நாட்களிலும் நேரத்திலும் வீட்டிற்கு வரும் தோழர்களுடன் பேச வேண்டியிருக்கும். ஆனால், அவசியத்தை ஒட்டி நேரம் ஒதுக்கி குடும்ப வேலைகளை கவனிப்பார்.
மற்றபடி அம்மாதான் ஏழு குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் கனிவுடன் கவனித்துக் கொள்வார். எல்லா குழந்தைகள் மீதும் அன்பை பொழிந்து சீராக கவனிப்பார். வருந்தி வருந்தி உணவளிப்பார்.
கோபம் என்ற ஒன்றை அம்மாவிடம் நாங்கள் பார்த்ததேயில்லை. சுடு சொல் ஒன்றும் கேட்டதேயில்லை. அம்மாவின் கவனத்தை அதிகம் பெறுவதற்கென்றே நாங்கள் முரண்டு பிடிப்பது உண்டு. அத்தனையையும் அம்மா பொறுமையாய் சமாளிப்பார். ..
இதனால்தான் அப்பா தன் அலுவலக, இயக்க வேலைகளில் நிம்மதியுடன் ஈடுபட முடிந்தது.
அம்மாவின் அன்பு நினைவினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.
இன்று அம்மாவின் நினைவுநாள்.
22/01/1929 - 30/11/2009
Comments
Post a Comment